ஸ்லோவேனியாவில், மரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மெலானியா டிரம்பின் மரச்சிற்பம் பொதுமக்கள் பார்வையிட திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஸ்லோவேனியா நாட்டில் உள்ள ரோஜ்னா (Rozno) என்ற இடத்தில் இந்த மரச்சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கலைஞரான பிராட் டவுனே (Brad Downey) என்பவர், தனது சொந்த செலவில் வாங்கிய மரத்தில் இந்த சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.
இதற்கென உள்ளூர் சிற்பி ஒருவரை உதவிக்கு பயன்படுத்திய அவர், அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, மெலானியா தோன்றிய உடையில் சிலையை வடிவமைத்துள்ளார்.
இந்த சிற்பம் குறித்து கருத்து தெரிவித்த டவுனே, அதிபரின் மனைவியான மெலானியா டிரம்ப் யூகோஸ்லேவியா நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர் என்றும், புலம்பெயர்ந்த ஒரு பெண்ணை அதிபர் திருமணம் செய்தும், அமெரிக்கா புலம்பெயர்வதற்கு எதிரான கொள்கையை உடையது என்பதை சுட்டிக்காட்டவே இதனை வடிவமைத்துள்ளதாக தெரிவித்தார்.
0 comments:
Post a Comment