தர்பார்’ திரைப்படத்துக்கு, கலைநயத்துடன் ரசிகர்கள் வடிவமைக்கும் போஸ்டர் டிசைன்களில் ஒன்று அதிகார பூர்வமாக வெளியிடப்படும் என அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகும் ‘தர்பார்’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். லைகா நிறுவனத் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் ரஜினி போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரம் ஏற்றுள்ளார். இந்நிலையில் போலீஸ் அதிகாரி உடையில் இருக்கும் ரஜினியின் HD புகைப்படங்கள் மற்றும் படத்தின் பேர் ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்ட ஏ.ஆர். முருகதாஸ், இந்த புகைப்படங்கள் மற்றும் பட தலைப்பை வைத்து கலைநயத்துடன் ரசிகர்கள் சிறந்த போஸ்டரை வடிவமைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இதில் சிறந்த போஸ்டர் தெரிவு செய்யப்பட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment