எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் 'பிகில்'. இப்படத்தின் முதல், இரண்டாம், மூன்றாம் பார்வை போஸ்டர்கள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரே படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையும் மிகப் பெரிய விலைக்கு விற்கப்ட்டுள்ளது.
இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு டில்லியில் தொடங்க உள்ளது. அந்த ஷெட்யூலுடன் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாம். சில நாட்களுக்கு முன் வரை சென்னையில் உள்ள ஒரு இஞ்சினியரிங் கல்லூரியில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்களாம்.
கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நயன்தாரா தவிர இந்துஜா, ரெபா மோனிக்கா, வர்ஷா என மேலும் சில இளம் ஹீரோயின்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி வில்லன்களாக நடிக்கிறார்கள்.
0 comments:
Post a Comment