பிரித்தானியாவிலிருந்து வந்த கழிவுப்பொருட்களை திருப்பி அனுப்ப தீர்மானம்

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை திருப்பி அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் 5 கொள்கலன்கள் நேற்று சுங்கத்திணைக்களத்தினரால் திறக்கப்பட்டது.
பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் என கூறி கொண்டுவரப்பட்ட இந்த கொள்கலன்களில் இருந்து தரை விரிப்பு, பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்கள் என்பன இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறான 102 கொள்கலன்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அவற்றில் 94 கொள்கலன்கள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு துறைமுகத்தின் சர்வதேச கொள்கலன் முனையத்தில் இந்த சந்தேகத்திற்கிடமான கொள்கலன்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் அரசுடமையாக்கப்படும். எனினும், இவற்றில் கழிவுப்பொருட்கள் அடங்குவதால் மீண்டும் அவற்றை திருப்பி அனுப்புவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment