சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார், அடுத்து சசிகுமார், சரத்குமார் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
பி.கே.மோகன்ராம் தயாரிக்கிறார். ஹர்ஷா வர்தன் ராமேஷ்வர் என்ற புதுமுகம் இசை அமைக்க, கணேஷ் சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கதாநாயகி முடிவாகாத நிலையில் இதன் படப்பிடிப்புகள் மும்பையில் ஆரம்பித்து நடந்து வருகிறது. இதில் சரத்குமார், சசிகுமார் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில், சரத்குமார் வில்லனாக நடிக்கிறார்.
இந்தப் படத்திற்கு நா நா என்று தலைப்பு வைத்து, முதல் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment