ஜாம்பவான்களின் கருத்துக்கள் எங்களை காயப்படுத்தாது, அர்ப்பணிப்பு உணர்வுடன், இன்னும் சிறப்பாக செயல்பட துாண்டும்,’’ என, தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தெரிவித்தார்.
இந்திய அணி தேர்வுக்குழு மீது விமர்சனங்கள் வருவது புதியதல்ல. முன்னாள் வீரர் மொகிந்தர் அமர்நாத், 1989ல் இந்திய அணி தேர்வுக்குழுவை ‘ஜோக்கர்கள்’ கூட்டம் என விமர்சித்தார். தற்போதுள்ள பிரசாத் தலைமையிலான குழுவில் சரண்தீப் சிங், தேவங் காந்தி, ஜடின் பிரன்ஜபே, ககன் கோடா என 5 பேர் உள்ளனர். இவர்களது ஒட்டுமொத்தமாக 13 டெஸ்டில் பங்கேற்ற அனுபவம் தான் உள்ளது என விமர்சனம் எழுந்தது.
விண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,‘திறமையற்ற தேர்வுக்குழுவினர்,’ என விமர்சித்தார்.
இதுகுறித்து தேர்வுக்குழு தலைவர் பிரசாத் கூறியது:
அதிக போட்டிகளில் பங்கேற்றால் தான் கிரிக்கெட் தொடர்பாக அதிகம் தெரிந்திருக்கும், இவர்களால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என எல்லோரிடமும் தவறான கருத்து உள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டு தலைவர் எட் ஸ்மித், ஒரு டெஸ்ட் மட்டும் தான் விளையாடினார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவராக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள டிரிவர் ஹான்ஸ் 7 டெஸ்டில் தான் பங்கேற்றார்.
128 டெஸ்ட், 244 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற மார்க் வாக், 87 டெஸ்ட், 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய கிரெக் சாப்பல், டிரிவரிடம் தான் பணியாற்றினர். அந்தஸ்து, அனுபவம் இங்கு கணக்கில் கொள்ளப்படவில்லை.
சர்வதேச போட்டிகள் தவிர, நாங்கள் மொத்தம் 477 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ளோம். எங்களது தேர்வுக்காலத்தில் 200 க்கும் அதிகமான முதல் தர போட்டிகளை பார்த்துள்ளோம். இந்த அடிப்படையில் தான் செயல்படுகிறேன்.
ஜாம்பவான் கிரிக்கெட் நட்சத்திரங்கள் மீது அதிகப்படியான மதிப்பு வைத்துள்ளோம். தேர்வுக்குழு தொடர்பாக வெளியான கருத்து துரதிருஷ்டவசமானது. இருப்பினும் அவர்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறோம். இவைகள் எங்களை காயப்படுத்தாது, மாறாக தேர்வுக்குழுவை ஒருங்கிணைந்து, அர்ப்பணிப்பு உணர்வுடன், இன்னும் வலிமையாக செயல்பட துாண்டும்.
0 comments:
Post a Comment