நகர அபிவிருத்தி அதிகார சபையின் நிதிப் பிரிவின் பொறுப்பதிகாரி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை குறித்த விசாரணைகளுக்காகவே அவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்.
மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அமைந்துள்ள காணி, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமானது என ஆணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு குறித்த விசாரணைகளுக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை சட்டரீதியாக அரசாங்கத்தின் கீழ் கொண்டுவராது, அரச நிதியை செலவிடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதேவேளை, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளரும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தை மாணவர்களுக்கு வழங்குவதில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கியதில் 2,300 மில்லியன் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment