முகத்தை முழுமையாக மூடும் நிகாப் மற்றும் புர்காவுக்கு நிரந்தர தடை விதிப்பது தொடர்பான சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நீதி அமைச்சர் தலதா அத்துகோரலவினால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து இலங்கையில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் நிகாப் மற்றும் புர்காவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
குறித்த தடையை நிரந்தரமாக்குவதற்கே அமைச்சரவை இன்று தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment