ஹாலிவுட்டுக்கு செல்லும் நடிகர்-நடிகைகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
அமெரிக்க பாடகர் நிக் ஜோனாசையும் காதலித்து திருமணம் செய்து அங்கேயே குடியேறி இருக்கிறார். ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோனே ஆகியோரும் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் ‘த எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆப் பகிர்’ என்ற வெளிநாட்டு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளியிட்டனர். நடிகர் நெப்போலியனும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
ராதிகே ஆப்தேவும் ஆங்கில படத்தில் நடித்து இருக்கிறார். சுருதிஹாசனும் ஆங்கில தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்த வரிசையில் இப்போது காஜல் அகர்வாலும் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னணி ஹாலிவுட் இயக்குனர் டைரக்டு செய்யும் இந்த படம் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
0 comments:
Post a Comment