பிரேசிலில் மனைவியை தூக்கி வந்து அவசர அவசரமாக மருத்துவமனையில் சேர்த்த நபரே, அவரை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
செவ்வாய் அன்று சான்டா காடரினாவில் உள்ள பெதஸ்டா மருத்துவமனையில் மாலை நேரத்தில் திடீரென மருத்துவமனைக்குள் ஓடிவந்த ஒருவன், எமர்ஜென்ஸி என அங்கிருந்த ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து தன் காரின் பின்புறத்தில் கிடத்தியிருந்த மனைவியை கையில் தூக்கிக் கொண்டு ஓடி வந்தான்.
மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் உள்ள தனது மனைவியை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு, ஆவணங்கள் எடுத்து வருவதாகக் கூறி அடுத்த சில விநாடிகளில் அங்கிருந்து வெளியேறிய அவன், மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பவேயில்லை.
20 நிமிட சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்தார். தலைமறைவான கணவனைத் தேடச் சென்ற போது, தனது வீட்டில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், மகனின் அறைக்கு வந்து பார்த்த போது இருவரையும் காணவில்லை என்றும் தாயார் பதிலளித்துள்ளார்.
0 comments:
Post a Comment