தமிழ் தலைமைகளுக்கு தலைவனாவது எனது நோக்கமல்ல – மனோ!

நாடு முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைப்பதே தனது நோக்கமென்றும் அதைவிடுத்து அனைத்து தலைவர்களுக்கும் பெருந்தலைவனாவது தனது நோக்கமல்லவென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு நேற்று  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தால்தான் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ முடியும். சிங்கள மக்களுடன் ஒன்று சேர்ந்தால்தான் ஏனைய முஸ்லிம் மக்களுடனும் ஒன்றுசேர முடியும். அப்போதுதான் இலங்கை நாட்டை ஐக்கியத்துடன் கட்டியெழுப்ப முடியும்.
நான் நாடு முழுவதும் உள்ள தமிழ் மக்களை ஒன்று சேர்க்க முயல்கிறேன். அது வடக்காக இருந்தால் என்ன கிழக்காக இருந்தால் என்ன மலையகமாக இருந்தால் என்ன இலங்கைத் தீவுக்குள் எங்கிருந்தாலும் தமிழர்கள் ஐக்கியப்பட வேண்டும்.
ஆனால் மனோ கணேசன் நாடு முழுவதும் உள்ள தலைவர்களை ஒன்றிணைத்து எல்லோருக்கும் பொதுவான பெருந் தலைவனாக பார்க்கின்றார் என குற்றச்சாட்டுக்கள் முன்னைவக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் ஒன்றை கூற விரும்புகின்றேன். எனக்கு தலைமை தேவையில்லை.
நான் தலைவர்களை மேடையில் அமர்த்திவிட்டு மாணவர்களுடன் இணைந்து தரையில் இருப்பவன்” என மேலும் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment