பிரித்தானியாவின் மகாராணி எலிசபெத் கூட இவ்வாறு செயற்பட்டிருக்க மாட்டார் எனவும், தன்னை நாட்டின் தலைவரின் மனைவி எனக் கூறிக் கொள்ளும் இவரின் நடவடிக்கை எங்கு போய் முடியுமோ தெரியாது எனவும் சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவின் மனைவி ஜலனி பிரேமதாச அண்மையில் மகளிர் கூட்டமொன்றில் கலந்துகொண்டு, நான் நாட்டினுடைய எதிர்காலத் தலைவரின் மனைவி என அறிவித்திருந்தார். இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு கூறினார்.
இப்பொழுது தெரிவு செய்ய வேண்டியுள்ளது ஜனாதிபதியை அல்ல, அவரது மனைவியை எனவும் இவர்கள் அரசியல் பைத்தியம் பிடித்தவர்கள் எனவும் சாடியுள்ளார்.
0 comments:
Post a Comment