பெரும் சர்ச்சைகள் மற்றும் சிக்கல்களைத் தொடர்ந்து, நடிகை அமலாபால் நடித்துள்ள ஆடை படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. மேயாத மான் பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கி இருக்கும் ஆடை படத்தில், நடிகை அமலாபால் ஆடையில்லாமல் நடித்திருப்பது குறித்தும், பெரும் சர்ச்சைகள் கிளம்பின.
இந்நிலையில், படம் வசூல் ரீதியில் வெற்றியடையும் என படக் குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். படத்துக்கு நேர், எதிர் மறையாக விமர்சனங்கள் வந்து கொண்டிருக்க, இந்தப் படத்துக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கும் நடிகை லட்சுமி கிருஷ்ணன், படம் குறித்து, படக் குழுவினருடன் விவாதிக்க விரும்புவதாக குறிப்பிட்டு, டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஆடை படக் குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். படம் பார்க்கும்போது, நடிகை அமலா பாலின் கடின உழைப்பு, படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. படம் குறித்து எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன. அதை ஒரு விவாதம் மூலம்தான் தீர்க்க முடியும். எனவே, படக்குழு ஆரோக்கியமான விவாதத்துக்கு தயாரா என சொல்ல வேண்டும். படம் குறித்து இயற்கையாக எனக்கு தோன்றியிருக்கும் கேள்விகளை, இயக்குநர் மற்றும் படக் குழுவினரிடம் நேரில் கேட்டு தெளிவு பெற வேண்டும். ஒரு இயக்குநராகவோ; நடிகையாகவோ இந்த கேள்விகளுக்கு நான் தெளிவு பெற விரும்பவில்லை. ஒரு சாதாரண பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு பார்வையாளராக தெளிவு பெற வேண்டியிருக்கிறது.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment