தூதுவரும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதியுமான மேன்மை தங்கிய கலாநிதி. அம்ரித் ரொஹான் பெரேரா மற்றும் தூதுவரும் ஐக்கிய நாடுகளுக்கான பார்படொஸின் நிரந்தர வதிவிட பிரதிநிதியுமான மேன்மை தங்கிய திருமதி. எச். எலிசபெத் தொம்சன் ஆகியோரினால் 2019 ஜூன் 28ஆந் திகதி நியூயோர்க்கில் வைத்து ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.
அதன் பிரகாரம், 2019 ஜூன் 28ஆந் திகதி முதல் இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கமும், பார்படொஸ் அரசாங்கமும் தீர்மானித்தது.
இலங்கை மற்றும் பார்படொஸ் ஆகிய நாடுகளுக்கு இடையில் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபிப்பதானது, அரசியல், சமூக – பொருளாதாரம் மற்றும் கலாசாரம் சார்ந்த துறைகளிலான தற்போதைய நட்புறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களை இரண்டு நாடுகளினதும் பரஸ்பர நன்மைகள் நிமித்தம் அதிகரிக்கச் செய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment