நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இரு சட்டமூலங்களையும் நிராகரித்த மத்திய அரசை எதிர்த்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இன்று கூடிய மக்களவையில், இந்த பிரச்சனையை மையப்படுத்தி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உரை நிகழ்த்தினார்.
மேலும் நீட் விலக்கு தொடர்பான மசோதாக்களை மத்திய அரசு 27 மாதங்களாக கிடப்பில் போட்டது ஏன்? என்றும் இதன்போது அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனாலும் மத்திய அரசு இவ்விடயத்துக்கு உரிய பதிலை வழங்காதமையினால், டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மக்களவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதேவேளை மாநிலங்களவையிலும் இந்த பிரச்சினையை முன்வைத்து தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment