உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அடிப்படைவாத அமைப்புக்களினால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறித்து கண்டறிவதற்கு பாதுகாப்பு அமைச்சின் கீழ் விசேட இராணுவப் பிரிவொன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இந்தப் பிரிவின் பிரதானியாக மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வட மாகாண கட்டளைத் தளபதியாக செயற்பட்டதன் பின்னர் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த புதிய பிரிவுக்கு இராணுவம், கடற்படை, விமானப்படை என்பவற்றைச் சேர்ந்த படைவீரர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் இன்றைய சகோதர தேசிய ஊடகமொன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment