தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள டியர் காம்ரேட் என்கிற படம் வரும் ஜூலை 26ஆம் தேதி நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.. இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஷ்மிகாவிடம் உங்கள் சொந்த மொழி கன்னடம் என்பதால் கன்னடத்தில் டப்பிங் பேச உங்களுக்கு எளிதாக இருந்திருக்குமே என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, “இல்லை இல்லை.. அது கஷ்டம்.. எனக்கு அந்த மொழி சரியா வராதுங்க” எனக் கூறியுள்ளார். இது கர்நாடகாவில், குறிப்பாக கன்னட திரையுலகில் உள்ளவர்களிடம் ராஷ்மிகா மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல கன்னட நடிகர் ஜக்கேஷ் என்பவர் ராஷ்மிகாவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஜக்கேஷ், “என்னுடைய நிறைய நண்பர்கள் இங்கே கன்னடத்தில் நடித்துவிட்டு மற்ற மொழிகளில் சென்று பிரபலமாகி இருக்கின்றனர்.. ஆனால் அவர்கள் ஒருபோதும் கன்னட மொழியை எங்கேயும் குறைத்து மதிப்பிட்டு பேசியது இல்லை.. ஆனால் இப்போதுள்ள இளைய தலைமுறையினர் அதுபோன்ற மரியாதையையும் தகுதிகளையும் தங்களிடத்தில் கொண்டிருக்கவில்லை என்பது துரதிர்ஷ்டம். இங்கே கன்னடர்களிடம் கிடைத்த கைதட்டலும் பாராட்டும் தான் உங்களை ஒரு நட்சத்திரமாகி உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்” என கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment