செக்குடியரசு நாட்டில் இடம்பெற்ற சர்வதேச தடகளப் போட்டிகளில் பெண்களுக்கான 200 மீ ஓட்டப் பந்தயத்தில் 23.25 வினாடிகளில் இலக்கை எட்டி இந்தியாவின் ஹிமா தாஸ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
19 வயதேயான ‘திங் எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்படும் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ், கடந்த 15 நாள்களில் வெல்லும் 4 ஆவது தங்கப்பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2 ஆம் திகதி போலந்தில் நடந்த போஸ்னான் மற்றும் கட்னோ தடகளப் போட்டிகளிலும் 200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் அடுத்தடுத்து தங்கம் வென்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 13 ஆம் திகதி செக் குடியரசின் கிளாட்னோவில் நடந்த தடகளப் போட்டியிலும் 200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமா தாஸ் தங்கம் வென்றுள்ளார்.
200 மீட்டர் ஓட்டத்தில் ஹிமாவின் முந்தைய சாதனை 23.10 வினாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து தங்கம் வென்று குவிக்கும் ஹிமா தாஸ்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
0 comments:
Post a Comment