நெதர்லாந்து தூதரகத்துடன் கொழும்பு மாநகர சபை இணைந்து மேற்கொள்ளும் ‘CAR FREE ZONE’ என்ற மோட்டார் கார்கள் அற்ற தினம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் மற்றும் கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனாநாயக்க ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.
இலங்கையில் முதல் தடவையாக மோட்டார் கார்கள் அற்ற தினம் ஒன்றை பிரகடனப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்திருந்தது. கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதகரம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியது. அதன் இடிப்படையில் இன்று அந்நத தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு காரணமாக கொழும்பு – குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள சில பாதைகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய இன்று காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரையில் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் கிரீன்பாத் வீதி, கன்னங்கரா மாவத்தை, மெட்லேன்ட் கிரசன்ட், ஸ்ரீலங்கா பதனம் மாவத்தை மற்றும் மாகஸ் பெர்ணான்டோ மாவத்தை ஆகிய பகுதிகளில் இவ்வாறு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீதிகள் மூடப்பட்டுள்ள காலப்பகுதியில் மாற்று வழிகளை பயன்படுத்தமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment