மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் 'வானம் கொட்டட்டும்'. இந்தப் படத்தை தனா இயக்குகிறார். இவர் ஏற்கனவே பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த படைவீரன் என்ற படத்தை இயக்கியவர்.
தனா இயக்கும் இரண்டாவது படம் வானம் கொட்டட்டும். விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா ஜெபாஸ்டியன் இருவரும் நடிக்கிறார்கள். இப்படத்தில் விக்ரம் பிரபுவும், ஐஸ்வர்யா ராஜேஷும் அண்ணன், தங்கையாக நடிக்கிறார்கள்.
சாந்தனு வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் ராதிகாவும், சரத்குமாரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.
ரகசிய போலீஸ், சூர்யவம்சம், சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்களில் ஏற்கனவே இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படங்களுக்குப்பிறகு ராதிகாவும், சரத்குமாரும் மீண்டும் இணைந்து 'வானம் கொட்டட்டும்' படத்தில் நடிக்கின்றனர். மணிரத்னம் வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைக்கிறார்.

0 comments:
Post a Comment