புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் செப்டம்பர் 23-ம் தேதி சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
இந்த கருத்தரங்கில் பங்கேற்பதற்காக நியூயார்க் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகமாக வாழும் சிக்காகோ, ஹூஸ்டன் ஆகிய நகரங்களுக்கு சென்று அங்குள்ள நம் நாட்டினருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை அங்குள்ள இந்தியர்கள் நலச்சங்கத்தினர் செய்து வருகின்றனர்.குறிப்பாக, ஹூஸ்டன் நகரில் உள்ள சுமார் 70 ஆயிரம் மக்கள் அமரும் வசதிகொண்ட என்.ஆர்.ஜி. ஸ்டேடியத்தில் பிரதமர் உரையாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
0 comments:
Post a Comment