ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டிலுள்ள அடிப்படைவாதிகளுக்கு பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஒருபோதும் இடம் கிடையாது.
உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து இடம்பெறும் பொதுத்தேர்தலிலும் பொதுஜன பெரமுனவே வெற்றிப் பெறும் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment