கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு அனைத்து அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமிக்கப்பட்டமைக்கு கல்முனையில் தமிழ் மக்களால் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அனைத்து அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக அனைத்து அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையையும், சகல அதிகாரம் கொண்ட கணக்காளரை நியமிக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை வரவேற்று கல்முனை மாநகரில் தமிழ் இளைஞர்கள் பட்டாசு கொளுத்தி தங்களது ஆரவாரத்தை வெளிப்படுத்தினர்.
0 comments:
Post a Comment