கடந்த சில வருடங்களாகவே நடிகர் ஜெயராம் நடித்து வரும் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகின்றன. மோசமான கதைகளை அவர் தேர்ந்தெடுப்பது தான் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது.. இதுகுறித்து சமீபத்தில் மனம் திறந்துள்ளார் நடிகர் ஜெயராம்..
“இது போன்ற கதைகள் தன்னைத் தேடி வரும்போது சில சூழல்கள் காரணமாக தன்னைத் தேடி வருபவர்களிடம் முடியாது என சொல்ல முடியாமல் வேறுவழியின்றி படங்களை ஒப்புக்கொண்டு விடுகிறேன். ஆனால் இளம் நடிகர்களுக்கு நான் சொல்லும் ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் உங்களுக்கு ஒரு கதை பிடிக்கவில்லை என்றால் உடனே முகத்திற்கு நேரே முடியாது என்று சொல்லிவிடுங்கள். அதனால் ஏற்படும் வருத்தம் கொஞ்ச நேரம் தான் இருக்கும்... சில நாட்களில் மறைந்தும் விடும்.. ஆனால் சூழல்கள் காரணமாக ஒப்புக்கொண்டு, அதனால் ஏற்படும் இழப்புகளும் மனவருத்தமும் நீண்ட காலத்திற்கு நம் மனதை கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்கும்” என கூறியுள்ளார் ஜெயராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment