மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்து தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், ஊரெழு அம்மன் ஆலயத்தில் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்ததால் அங்கு கூடியிருந்த பக்தர்கள் நாலா திசையும் சிதறி ஓடினர்.
மூவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகினர். அவர்களில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment