சபரிமலையில் மழை; பக்தர்கள் தவிப்பு

சபரிமலையில் தொடர்ந்து பெய்யும் மழையால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். மண்டல சீசனுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறினார்.


சபரிமலையில் ஆடிமாத பூஜைகள் நடைபெற்று வருகிறது. கடந்த 16, 17 தேதிகளில் லேசான மழை பெய்தது. ஆனால் நேற்று காலை 5:00 மணிக்கு நடை திறந்த போது தொடங்கிய மழை இரவிலும் தொடர்ந்தது. மலையேறும் பக்தர்கள் சிரமப்பட்டனர். பிளாஸ்டின் தடை உள்ள நிலையில் பாலிதீன் கவர்களால் இருமுடி கட்டுகளை பக்தர்கள் நனையாமல் பாதுகாத்தனர். கவர்கள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.


ரோடுகள் சீரமைப்பு:


திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறியதாவது:உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சபரிமலை பகுதிக்கான ரோடுகளை சீரமைக்க 36.29 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளது. 15.4 கி.மீ. தூாரமுள்ள நான்கு முக்கிய ரோடுகள் பராமரிப்புக்கு 12.35 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. பம்பையில் தற்போதுள்ள 268 கழிவறைகளுடன், 68 கழிவறைகள் கூடுதலாக கட்டப்பட்டு அக்., இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும்.



மரக்கூட்டம் முதல் சன்னிதானம் வரை 12 சுடுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன, இந்த ஆண்டு மேலும் எட்டு குழாய்கள் அமைக்கப்படும். நிலக்கல்லில் 120 கோடி ரூபாய் செலவில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். 20 ஆயிரம் பக்தர்கள் ஒரே நேரத்தில் தங்குவதற்கு வசதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment