மாகாண சபைத் தேர்தல் எனும் போர்வையில் ஜனாதிபதித் தேர்தலை தள்ளிப் போடும் முயற்சி இடம்பெறுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளைத் தோற்கடிக்கும் பணிகளை தாம் முன்னெடுத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பெதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார் .
தூக்கத்திலிருந்து எழுந்த ஒருவர் போன்று தற்பொழுது மாகாண சபைத் தேர்தல் குறித்து முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இது ஜனாதிபதித் தேர்தலை இழுத்தடிப்புச் செய்வதற்கான ஒரு முயற்சியே ஆகும். இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திப்போடுவதற்கு எடுத்த அத்தனை முயற்சிகளையும் முறியடித்தோம் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் கூறினார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment