தமிழர்கள் தனி நாடு கோரிக்கையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற முயற்சிக்கின்றபோது, அதனையும் இலங்கை அரசு புறந்தள்ள முயற்சிப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு புதிய அரசியல் யாப்பு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதயசுத்தியுடன் முழு முயற்சிகளில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “புதிய அரசியல் யாப்பு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொண்டோம்.
குறிப்பாக அரசியல் அமைப்பு குழுவில் அங்கம் வகித்ததோடு, 6 உபகுழுக்களில் அங்கம் வகித்து முழுமையான கருத்துக்களையும் வழங்கியிருந்தோம். ஆனால் அதனை இலங்கை அரசு உதாசீனம் செய்து ஏமாற்றிவிட்டது.
தமிழர்கள் தனி நாட்டு கோரிக்கையை கைவிட்டு சமஷ்டி அடிப்படையிலான தீர்வை பெற முயற்சிக்கின்றபோது அதனையும் புறந்தள்ளவே இலங்கை அரசு முயற்சிக்கிறது” என மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment