ஒப்பந்தம் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இந்த வாரம் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றுக்கான தயார்ப்படுத்தல்களை அயர்லாந்து ஆரம்பிக்குமென ஐரிஷ் துணைப்பிரதமர் சைமன் கொவேனி தெரிவித்துள்ளார்.
ஒக்ரோபர் 31 ஆம் திகதிக்குள் புதிய ஒப்பந்தமொன்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொள்ளாத நிலையில் ஒப்பந்தம் எதுவுமில்லாமல் வெளியேறுவதற்கு தயாராக உள்ளதாக கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைப் போட்டியாளர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட தயார்ப்படுத்தல் திட்டம் முந்தைய பிரெக்ஸிற் காலக்கெடு திகதிகளான மார்ச் 29 மற்றும் ஏப்ரல் 12 ஆகிய திகதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்களைச் செம்மைப்படுத்தி மேம்படுத்தும் என கொவேனி கூறியுள்ளார்.
மார்ச் மற்றும் ஏப்ரலில் தவிர்க்கப்பட்டதை போலவே ஒக்ரோபரிலும் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை தவிர்க்க முடியுமென மக்கள் நம்புகிறார்கள் ஆனால் அது சாத்தியமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடினமான எல்லையைத் தடுக்கும் இலக்குகளை அடைவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை சந்தையைப் பாதுகாப்பதற்குமான திட்டமிடல்கள் ஐரோப்பிய ஆணையத்துடன் இணைந்து தொடருமெனவும் கொவேனி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment