ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று (02) தனக்கு கிடைக்கப் பெற்றதாகவும் அதில் குறித்த நிறுவனத்தில் இடம்பெற்ற தில்லு முல்லுகள் பல காணப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
உயர் மட்ட அரசியல் தலைவர்கள் கோடிக் கணக்கான நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பான தகவல்கள் இந்த அறிக்கையில் காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment