கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி நீடிக்க வேண்டுமாக இருந்தால், சில மூத்த அமைச்சர்கள் தங்கள் பதவியை தியாகம் செய்யதான் வேண்டும் என அமைச்சர் சிவசங்கர ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இன்று(திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், “காங்கிரஸ் – ஜனதா தளம் கட்சி இடையே சில பிரச்சினைகள் உள்ளது. சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பது உண்மைதான். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான சித்தாராமையா மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று சில உறுப்பினர்கள் தெரிவித்து வந்தனர். இதனால் தான் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது.
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நீடிக்க வேண்டும் என்றால், சில மூத்த அமைச்சர்கள் தங்கள் பதவியை தியாகம் செய்யதான் வேண்டும். அவர்களுக்கு பதிலாக புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதன் மூலம், கூட்டணி ஆட்சிக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும்” என கூறியுள்ளார்.
இதேவேளை கர்நாடகாவில் 21 காங்கிரஸ் அமைச்சர்கள் தன்னிச்சையாக தங்கள் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான சித்தாராமையா குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment