கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிமிடம் நுவரெலிய முகாம் ஒன்றில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக கூறப்படும் மற்றுமொருவர் மஹரகம பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கடற்படை புலனாய்வுப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
20 வயதுடைய தாஜுதீன் அஹமட் என்பவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment