தபால் மூலம் வாக்களிக்க உள்ள அரச சேவையாளர் கவனத்திற்கு!

எதிர்வரும் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ள அரச சேவையாளர்கள் 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவான பற்றுச் சீட்டுகளை அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களிடமும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளது .
இந்த விடயத்தை தேர்தல்கள் செயலகம் அரச உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்துள்ளது.
அத்துடன் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவான பற்றுச் சீட்டு முக்கயமானது என்றும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment