பலரைதத் தாக்கிய பெண் புலியை கிராமத்தினர் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் பிலிபிட்((Pilibhit)) புலிகள் காப்பகம் உள்ளது.
மட்டைனா ((Mataina)) கிராமத்திற்குள் நேற்று முன்தினம் 6 வயதான பெண் புலி ஒன்று புகுந்து 9 பேரைத் தாக்கியுள்ளது.
ஆத்திரம் அடைந்த அந்த கிராமத்தினர், அந்தப் புலியை பெரிய கம்புகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்கிய போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனே அப் பகுதிக்குச் சென்றுள்ளனர். ஆனால் அந்தக் கிராமத்தினர், படுகாயம் அடைந்த புலியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அந்தப் புலி அப்பகுதியிலேயே உயிரிழந்த நிலையில், அக் கிராமத்தைச் சேர்ந்த 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்து வனத்துறையினர் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment