திருகோணமலை உயா் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகா் இளஞ்செழியனின் தனது பாதுகாவலாின் குடும்பத்தாருக்கு வழங்கும் மனிதாபிமான உதவிகள் தொடா்பில் சிலா் விமா்சனம் செய்திருந்தனர்.
இந்நிலையில் நீதிபதி இளஞ்செழியனை விமர்சித்தவர்களிற்கு எதிராக தென்னிலங்கை மக்கள் கருத்துக்களை கூறியிருப்பதோடு , நீதிபதி மா.இளஞ்செழியனின் மனிதாபிமான உதவிகளை அவா்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக செயற்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவரது மெய்ப்பாதுகாவலர் உயிரிழந்தார்.
இதனையடுத்து உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி உதவி செய்வது தொடர்பில் பலர் விமர்சிப்பதாக நேற்று செய்தி வெளியாகி இருந்தது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சிங்களவ மக்கள், நீதிபதி இளஞ்செழியன் மீது பொறாமை கொள்ளும் சிலரே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இவ்வாறான ஒரு மனிதரை தாம் மிகவும் மதிப்பதாகவும் அவரது சேவைக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து தென்னிலங்கை மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையில் மிகவும் மதிக்கத்தக்க ஒரு நீதிபதி அவர் என குறிப்பிட்டுள்ள தென்னிலங்கை மக்கள் நீதிபதி செய்யும் சேவையானது மிகவும் விசேடமானதெனவும் அதனை விமர்சிக்க கூடாது எனவும் கூறியுள்ளனர்.
மனிதாபிமானம் தெரியாத மனிதர்கள் உள்ள நாட்டில் நீதிபதி செய்யும் இப்படியான மகத்துவமிக்க செயலுக்கு இன, மத பேதமின்றி மதிப்பளிக்க வேண்டும் என்றும், உண்மையான நல்லிணக்கம் எது என்பதை அறியாத முட்டாள்கள் வாழும் நாட்டில் நீதிபதி போன்ற ஒருவருக்காக நாம் எப்போதும் இருப்போம் எனவும் பல தென்னிலங்கை மக்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment