ஐ.தே.க.விலிருந்து வெளியேறுவோம் – யோகேஸ்வரன்

தமது கோரிக்கைகளை மஹிந்த தரப்பினர் ஏற்றுக்கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குகின்ற ஆதரவை மாற்றக்கூடிய சூழல் உருவாகலாம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ஆசனத்தை கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, மொட்டுக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன மும்முரமாக இருக்கின்றன.
எங்களைப் பொறுத்தவரை தற்போது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக இருந்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை காப்பாற்றியிருக்கின்றோம். அதற்காக நாங்கள் எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவோம் என்று ரணில் விக்ரமசிங்க நினைக்கக்கூடாது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நாங்கள் எதிரானவர்கள், ஆகையால் தங்கள் பக்கம்தான் அவர்கள் இருப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியினர் நினைக்கின்றனர். நாங்கள் மிகவும் அவதானமாக இருக்கின்றோம்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் எங்களுக்கு அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கின்றது. எங்களை ஏமாற்றியிருக்கின்றது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி சரியான வேட்பாளரை நிறுத்தி எங்களோடு கலந்துரையாட வருவார்களானால் நாங்கள் கொடுக்கின்ற விடயங்களுக்கு அனுசரணை வழங்குவார்களானால், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குகின்ற ஆதரவை மாற்றக்கூடிய சூழல் உருவாகலாம்” என மேலும் தெரிவித்துள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment