கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி உலகெங்கிலும் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்ற படம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார். இந்த படத்தில் நடிக்க ஜேம்ஸ் கேமரூன் தன்னை அழைத்ததாகவும், தான் மறுத்துவிட்டதாகவும் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி உள்ளார் பாலிவுட் நடிகர் கோவிந்தா.
அவதார் படத்தை உருவாக்குவதற்கு முன்பே ஜேம்ஸ் கேமரூன், கோவிந்தாவை சந்தித்ததாகவும் அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு கோவிந்தா உங்கள் கணக்குப்படி பார்த்தால் இந்த படம் முடிவதற்கு ஏழு வருடங்கள் ஆகிவிடும் என்றாராம்..
இப்படி சொன்னதால் கோவிந்தா மீது கேமரூனுக்கு சற்றே வருத்தம் ஏற்பட்டதாம்.. இதில் இன்னொரு விஷயத்தையும் கூறியிருக்கிறார் கோவிந்தா.. அதாவது இந்த அவதார் என்கிற டைட்டிலையே ஜேம்ஸ் கேமரூனுக்கு தந்தது அவர் தானாம். மேலும் அதேசமயம் இந்த படம் வெளியானால் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் கேமரூனிடம் கூறினாராம்.. இதெல்லாம் கேட்க நல்லா இருக்கு.. ஆனா நம்புற மாதிரியா இருக்கு என்கிறார்கள் நெட்டிசன்கள்.
0 comments:
Post a Comment