இலங்கைக்குள் எந்தவொரு முகாமையும் நிறுவும் திட்டம் அமெரிக்காவுக்கு இல்லையெனவும், அவ்வாறன தேவையும் அமெரிக்காவுக்கு இல்லையெனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பீ. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் எதிர்வரும் நாட்களில் கைச்சாத்திடப்படவுள்ள இரு தரப்பு பாதுகாப்பு உடன்படிக்கையான ‘‘சோபா” வில் காணப்படும் சில சரத்துக்கள் இலங்கையின் இறைமைக்கு பாதிப்பாக காணப்படுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment