இங்கிலாந்தில் ஜெட் ஸ்கை இயந்திரம் மூலம் 190 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து சண்டைப் பயிற்சியாளர் சாதனை படைத்துள்ளார்.
சாங்கேட் (Sangatte) என்ற இடத்தைச் சேர்ந்த ஃப்ராங்கி ஸபாடா (Franky Zapata) என்பவர் ஜெட் ஸ்கை இயந்திரம் மூலம் செயின்ட் மார்கரெட் வளைகுடாவை கடக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரின் சாகசத்தைக் காண ஏராளமானோர் கூடியிருந்தனர்.
ஜெட் ஸ்கை இயந்திரத்தை இயக்கிய சில நொடிகளில் அவர் ஏறத்தாழ 190 கிலோ மீட்டர் வேகத்தைத் தொட்டார்.
35 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க முயன்ற ஃப்ராங்கி இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் 18 கிலோ மீட்டரில் தனது முயற்சியைக் கைவிட்டார். ஆனாலும் ஜெட் ஸ்கை மூலம் அவர் பறந்த வேகம் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment