புத்தளம் ஆனமடுவ ஹோட்டல் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் தீ வைக்கும் காட்சி ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த ஹோட்டல் மூடியிருந்த போது இரவு 12.35 மணியளவில் தனியாக நடந்து வரும் நபர் ஒருவரே இவ்வாறு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளளார்.
குறித்த நபர் அங்கு வரும் காட்சி அங்கிருந்த சிசிரீவியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூடியிருக்கும் ஹோட்டலுக்கு கீழ் திரவம் போன்று ஒன்றை பயன்படுத்தி இந்த தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த ஹோட்டலுக்கு பல முறை தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ வைப்பு முயற்சிக்கு பின்னால் ஒரு அரசியல்வாதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடத்தி தீர்வு வழங்குமாறு பாதிக்கப்பட்ட நபர் ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment