ஐ.எஸ்.பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு புதிய சட்டங்கள் அவசியமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரணில் மேலும் கூறியுள்ளதாவது,
“உளவுத்துறை சேவையை முற்றாக மறுசீரமைக்க வேண்டியது மிகவும் அவசியமான தேவைப்பாடாக தற்போது காணப்படுகின்றது.
மேலும் இலங்கையின் பாதுகாப்புச் சட்டங்கள் வெளிநாட்டுச் சட்டங்களைப் போன்று திருத்தப்பட வேண்டும்.
இதேவேளை தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாததால், நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தோன்றுவதைத் தடுக்கும் பொருட்டு புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
விடுதலை புலிகள் அமைப்பை அழித்ததைப் போன்று ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாது.
0 comments:
Post a Comment