அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றில் செயற்படுவோம் – ஸ்ரீதரன்

தமிழ் இளைஞர்களை பலியெடுக்கும் அவசரகால சட்டத்திற்கு எதிராகவே தாம் நாடாளுமன்றில் செயற்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடக சந்திப்பு இன்று   கிளிநொச்சியில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன் தொடர்பாக பொலிஸார் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும், இதேபோன்று பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, எமது இளைஞர்களை பலியெடுக்கும் அவசரகாலச் சட்டத்திற்கு எதிராகவே நாம் நாடாளுமன்றில் செயற்படுவோம் என அவர் தெரிவித்தார்.
குறித்த சட்டம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கவில்லை. இப்போது இந்த சட்டத்தின் விளைவுகளை நாம் எதிர்கொள்கின்றோம். அவ்வாறான சட்டம் நீடிப்புக்காக கொண்டுவரப்படும்போது அதற்கு எதிராக செயற்படுவாம் என அவர் தெரிவித்தார்.
மேலும், ஆவா படை உள்ளிட்டவை அரச படைகளின் ஒத்துழைப்புடனேயே செயற்படுகின்றமை தொடர்பாவும் அவர் குறிப்பிட்டார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment