நாடாளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக சமாஜ்வாதி எம்பி ஆஸம்கான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
முத்தலாக் மசோதா தொடர்பான விவாதத்தின் போது, பாஜக எம்பி ரமாதேவிக்கு எதிராக, ஆஸம்கான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஆஸம் கான் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அல்லது அவரை மக்களவையின் எஞ்சிய காலம் வரை இடை நீக்கம் செய்யவேண்டும் என்றும் ரமாதேவி எம்பி வலியுறுத்தி உள்ளார்.
இதையடுத்து நடாளுமன்றத்திற்கு வெளியே அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் ஓம்பிர்லா ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமையன்று மக்களவைத் தலைவர் முன்பாக ஆஸம்கான் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment