எப்போது பார்த்தாலும் பிரதமர் மோடியை விமர்சித்து பேசியே வந்தார் சந்திரபாபு நாயுடு. தனது அரசின் சாதனைகளைக் கூடச் சொல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட நாயுடுவுக்கு ஆந்திர மக்கள் கொடுத்திருப்பது மரண அடி.. மீண்டு வரவே முடியாத அடி இது என்று பாஜக கடுமையாக சாடியுள்ளது.
விஜயவாடாவுக்கு வந்திருந்த முன்னாள் மத்திய பிரதேச முதல்வரும், மூத்த பாஜக தலைவருமான சிவராஜ் சிங் செளகான்தான் இப்படி கோபாவேசமாக பேசியுள்ளார். காங்கிரஸுக்குக் கிடைத்த அடியைப் போல மிக பலத்த அடி தெலுங்கு தேசம் கட்சிக்கும் கிடைக்கும். அதிலிருந்து நாயுடுவால் மீண்டு வரவே முடியாது என்றும் அவர் சாபம் விட்டுள்ளார்.
விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் காலாவதியாகி விடும். காலிக் கூடாரமாகி விடும். காங்கிரஸுக்குக் கிடைத்த அதே அடிதான் தெலுங்கு தேசம் கட்சிக்கும் கிடைக்கும். மத்தியில் பெரும் ஆதிக்கம் செலுத்த ஆசைப்பட்டார் நாயுடு. ஆனால் சொந்த மண்ணிலேயே அவரால் மீண்டு வர முடியாத அளவுக்கு அடி விழுந்துள்ளது.
0 comments:
Post a Comment