மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதியின் முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மீரிகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்ப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.
இதேவேளை மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கம் மற்றும் ஏனைய கட்சிகள் என அனைவரும் தொடர்ந்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அமைச்சர் சஜித் உள்ளிட்ட சிலர் ஜனாதிபதியின் கருத்தினை ஆதரிக்கும் வகையில் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment