ஹாங்காங்கில் இன்று வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராகவும் காவல்துறையினருக்கும் ஆதரவாகவும் ஆயிரக்கணக்கானோர் இணைந்து நகரின் முக்கிய சாலைகளில் மாபெரும் ஊர்வலம் நடத்தினர்.
ஹாங்காங் நகரில் கைதாகும் குற்றம் சாட்டப்பட்டோர் அல்லது குற்றவாளிகளைச் சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் ஒப்படைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹாங்காங் நகர மக்கள் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கடந்த ஜூன் மாதம் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் அந்த மசோதா நிறைவேற்றப்படாது என ஹாங்காங் தலைமையால் உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், போராட்டங்களும் வன்முறைச் சம்பவங்களும் தொடர்ந்து வந்தன.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த வரும் காவல்துறையினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து ஹாங்காங்கில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் வன்முறையை ஒடுக்கப் பணியாற்றும் காவல்துறையினருக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் ஆயிரக்கணக்கானோர் இன்று ஹாங்காங் நகர் முழுவதிலும் உள்ள முக்கியச் சாலைகளில் மாபெரும் பேரணி நடத்தினர்.
0 comments:
Post a Comment