சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, ரேவதி, யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஜாக்பாட். கல்யாண் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலரை, சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இன்று(ஜூலை 23) வெளியிட்டுள்ளனர்.
ராட்சசி படத்தில் செம சீரியசான கேரக்டரில் நடித்திருந்த ஜோதிகா, இப்படத்தில் அதற்கு நேர் எதிரான ஜாலியான கேரக்டரில் நடித்திருக்கிறார். டிரைலரிலேயே அவரும், ரேவதியும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும்படி இருக்கிறது.
நான் 100 காலா, 500 கபாலி, 1000 பாட்ஷா, என பஞ்ச் டயலாக்குகளுக்கு பஞ்சமே இல்லை. டிரைலரையே வித்தியாசமாக, 'காசு போட்டது சூர்யா, நடிச்சது ஜோதிகா, கூட நடிச்சது ரேவதி' என வித்தியாசமாக வெளியிட்டுள்ளனர்.
டாக்டர், போலீஸ் என பல கெட்டப்புகளில் ஜோதிகாவும், ரேவதியும் வருகின்றனர். எனவே நிச்சயம் இப்படத்தில் அவர்கள் தில்லாலங்கடிகளாகத் தான் நடித்துள்ளனர் எனத் தெரிகிறது. இந்த படம் அடுத்த மாதம் 2ம் தேதி ரிலீசாகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment