கோவையில் உள்ள கோவில் ஒன்றில் சுவாமி சிலைகளோடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை செதுக்கிவைத்து தொண்டர்கள் தினமும் கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 ஆவது வார்டு, கணேசபுரம் பகுதியில் உள்ளது மூரண்டம்மன் கோவிலின் எதிர்புறம் உள்ள மாநகராட்சி யோகா மையத்தில் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு தினமும் வழிபாடு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது சுவாமி சிலைகளோடு சேர்த்து ஜெயலலிதா உருவப்படமும் செதுக்கப்பட்டுள்ளது. 8 டன் எடை கொண்ட ஒரு கல்லில் ஒருபுறம் காலபைரவர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமி சிலைகளும், மறுபுறம் ஜெயலலிதாவின் உருவமும் செதுக்கப்பட்டு தினமும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.
தங்கள் பகுதிக்கு ஜெயலலிதா செய்த நன்மைகளுக்காக நன்றி தெரிவிக்கும் விதத்தில் அவரை தெய்வமாக வணங்கி வருவதாக தொண்டர்கள் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment