பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஹேசா விதானகே எம்.பி. தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நிலையில் அவருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அவருக்கு எதிரான சகல குற்றச்சாட்டுக்களும் நிறைவு பெறும் வரையில் அவருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்காதிருக்குமாறு அரசாங்க உயர் அதிகாரிகளிடம் வேண்டுகோள்விடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment