அனுராக் காஷ்யப் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘தேவ் டி’ படம் மூலம் பிரபலமானவர் மாகி கில். இவர் நடிக்க வந்து 16 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும் அவரால் முன்னணி நடிகை என்ற நிலையை அடைய முடிய வில்லை. 45 வயதாகும் மாகி கில்லுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி மும்பை சினிமாவில் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பேட்டி ஒன்றில் தனக்கு பெண் குழந்தை இருப்பதாகவும் வரும் ஆகஸ்டு மாதம் அதன் மூன்றாவது பிறந்தநாள் வருவதாகவும் மாகி கில் தெரிவித்துள்ளார்.
மாகி கில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மீடியாக்களிடம் பேசுவது இல்லை. இத்தனை நாள் ஏன் இதை மறைத்தீர்கள் என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ’நான் ஒன்றும் மறைக்கவில்லை. உங்களுக்கு குழந்தை இருக்கிறதா என்று மீடியா இதுவரை என்னிடம் கேட்டது இல்லை.
தற்போது கேட்டதால் பதில் அளித்தேன். ஒரு பெண் குழந்தைக்கு தாய் என்பதில் பெருமையாக உள்ளது. எனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை.
எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது செய்து கொள்வேன். திருமணம் செய்து கொள்வதற்கான தேவை என்ன? எல்லாம் நம்மை பொறுத்து தான் உள்ளது. திருமணம் செய்யாமலேயே குடும்பம், குழந்தைகளுடன் இருக்கலாம்.
இவ்வாறு மாகி கில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment